சேலம்: டி. என். பி. எஸ். சி. தொழில் நுட்ப பணிக்கான போட்டி தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிக்கான போட்டி தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நேற்று தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும் இந்த தேர்வை எழுத 2 ஆயிரத்து 682 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 9. 30 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதற்காக காலை 9 மணியில் இருந்தே தேர்வர்கள், மையத்திற்கு வரத்தொடங்கினர். பலத்த சோதனைக்கு பிறகு தேர்வர்கள், தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். 9. 30 மணிக்கு பிறகு வந்தவர்களை தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட வில்லை. மாவட்டம் முழுவதும் 1, 570 பேர் இந்த போட்டி தேர்வை எழுதினர். விண்ணப்பித்திருந்த 1, 112 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு அறைகளை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என மொத்தம் 300 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தேர்வு மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.