தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் (81) உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு (நவ.9) காலமானார். அவரது உடலுக்கு, இரவு முதலே உறவினர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவக்குமார் மற்றும் கார்த்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, “எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை முழுமையாக செய்யக்கூடியவர். தமிழ் சினிமாவுக்கு அவர் இல்லை என்பது பேரிழப்பாகும்.