மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிகழ்ச்சியில் பேசிய கே. பாலகிருஷ்ணன், “நமது கட்சியில் தவறு செய்பவர்கள் இருக்க மாட்டார்கள். வேறு கட்சியில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையை குத்தகைக்கு எடுத்தவர்கள் கூட மற்ற கட்சிகளில் நிர்வாகிகளாக இருக்கலாம். நான் பெருமையாக சொல்லுகிறேன், குடிகாரர்களுக்கு கட்சியில் இடம் இல்லை என சொன்ன ஒரே கட்சி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தான்” என்றார்.