அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆரஞ்சு தோலில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடிவில், குடலில் உள்ள சில பாக்டீரியாக்கள், உணவை செரிக்க உதவும்போது, ‘டிரைமெதிலமைன் N ஆக்ஸைடு’ என்கிற இதய நோய்க்கு காரணமான வேதிப்பொருளை உருவாக்குவதையும், ஆரஞ்சுத் தோலில் உள்ள பெருலோயில்புட்ரெஸ்சைன் என்னும் கலவை, இந்த வேதிப்பொருள் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது என்றும், இதை பிரித்தெடுத்து இதய நோய்க்கான மருந்தை உருவாக்க முடியும் என கண்டறிந்துள்ளனர்.