இது ஒரு ஆன்மிக அரசு என்பதை மெய்ப்பித்து வருகிறது என தமிழ்நாடு அரசுக்கு தருமபுர ஆதீனம் புகழாரம் சூட்டியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், அனைத்து முகூர்த்த தேதிகளிலும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. குறிப்பாக பெரிய கோயில்கள் என்றும் இல்லாமல் சிறிய சிறிய கோயில்களிலும் குடமுழுக்கு நடைபெறுவது சாதனை என கூறியுள்ளார்.