தாரமங்கலத்தில் நேபாள நாட்டை சேர்ந்தவர் மின்சாரம் தாக்கி பலி
நேபாள நாட்டை சேர்ந்தவர் சுமித் சவுத்ரி (வயது 19). இவர் தாரமங்கலம் அருகே பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் இயங்கி வந்த ஆவின் பால் பூத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அங்கு இருந்த கிரைண்டரை தொட்ட போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சுமித் சவுத்ரி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.