ஓமலூர் அருள்மிகு ஓம்சக்தி, ஆதி பராசக்தி அம்மன் திருக்கோவிலில் 45-ம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலய விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி கரகம், கஞ்சிக்கலையம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற செவ்வாய்சந்தை அருள்மிகு ஓம்சக்தி, ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவிலில் நேற்று (ஆகஸ்ட்-15) வியாழக்கிழமை ஆடிப்பூர கஞ்சிக்கலய விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கடைவீதி பால்கடை குஞ்சுமாரியம்மன் கோவிலிருந்து 500 மேற்பட்ட பக்தர்கள் செவ்வாடை உடுத்தி கஞ்சிக்கலயம், முளைப்பாரி, அக்னிசட்டி, பால்குடம், சந்தனகுடம் போன்றவற்றை தலையில் சுமந்துவாரு நகரின் பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து ஓம்சக்தி, ஆதிபராசக்தி அம்மனுக்கு பக்தர்கள் அனைவரும் தங்கள் கைகளில் பாலாபிஷேகம் செய்துக் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஓமலூர் மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நேற்று காலை முதல் மாலை வரை கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.