சேலம் மாவட்டம், ஓமலூரில் தர்மபுரி செல்லும் பிரதான சாலையில் தொடர்ந்து சாலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் வங்கி அருகே ஏராளமான இரு சக்கர வாகனங்கள், மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை அவ்வழியே ரோந்து சென்ற போக்குவரத்து காவலர் விதிமீறல் வாகனங்கள் மீது உடனடி ஸ்பாட் பைன் போட்டு அதிரடி காட்டினார்.