நெடுஞ்சாலைபணி ஆட்சியரின் உத்தரவின் பேரில் வீடு இடிப்பு

84பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த குடியிருப்பு வீடுகளுக்கு இழப்பீட்டு தொகை நெடுஞ்சாலைத்துறையினர் வழங்கினர்கள். இதில் அதே பகுதியைச் சேர்ந்த காவல்துறையில் ஓய்வுபெற்ற ஜெயராமன் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான வீட்டுக்கு நெடுஞ்சாலைத் துறையினர் வழங்கும் இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லாததால் அவர்கள் அப்பணத்தை வாங்க மறுத்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், டிஎஸ்பி தலைமையிலான 50 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு உடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் அப்போது வீட்டின் உரிமையாளருக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் முற்றவே காவல்துறையினர் சமரச பேச்சில் ஈடுபட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து கலந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் உள்ள வீட்டை நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் முற்றிலும் அகற்றினார்கள்.
தேசிய நெடுஞ்சாலை பணிக்காக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வீடுகளை இடித்த சம்பவம் அப்போ இதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி