ஓமலூர் - Omalur

ஓமலூர்: மூன்று கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு

ஓமலூர்: மூன்று கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊமகவுண்டன்பட்டி கிராமத்தில் அருள்மிகு சக்தி மாரியம்மன், நீர் மாரியம்மன், மல்லிகேஸ்வரர் பர்வதவர்தினி திருக்கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் நேற்று (ஏப்ரல் 15) இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து சாமி கழுத்தில் அணிவித்திருந்த தங்கத் தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.  அருள்மிகு நீர் மாரியம்மன் கோவிலில் 60 ஆயிரம் மதிப்புள்ள 6 கிராம் தங்கத் தாலி, மல்லிகேஸ்வரர் கோவிலில் 35 ஆயிரம் மதிப்பிலான நான்கு கிராம் தாலி மற்றும் உண்டியல் பணம் திருடிச் சென்றுள்ளனர். சக்தி மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் கோவிலில் தங்கம் வெள்ளி பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று உள்ளனர்.  இந்த திருட்டு சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓமலூர் அருகே ஒரே நேரத்தில் மூன்று கிராம கோவில்களில் திருட்டு நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా