சேலம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு

66பார்த்தது
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலையில் சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மருத்துவமனையில் இன்று(அக்.13) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்து மாத்திரைகள் வழங்குமிடம், சித்த மருத்துவமனை பிரிவு, சிடி ஸ்கேன் எடுக்கும் அறை, எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு, இரத்த சுத்திகரிப்பு மையம், படுக்கை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தொடர்ந்து மருத்துவமனையினை சிறந்த முறையில் பராமரித்து பணியாற்றிடும் வகையில் மருத்துவர்களுக்கு தேவையான அறிவுறைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி