சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில், மேட்டூர், ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் செல்லும் பைப் லைனில் நேற்று உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமலூர் பேரூராட்சி சுகந்தம் நகர் அருகில் உள்ள பாலத்தின் கீழ் உடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து ஓமலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, பைப் லைன் உடைப்பு சரி செய்யப்பட்ட பின்பு குடிநீர் விநியோகம் செய்ய இயலும் என ஓமலூர் பேரூராட்சி தலைவர் செல்வராணி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.