ஓமலூரில் சத்துணவு ஊழியர் சங்க 16-வது மாவட்ட மாநாடு!

68பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் ரத்தின மஹால் திருமண மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 16-வது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் பழ. வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலபொதுச்செயலாளர் நூர்ஜஹான் தொடங்கி வைத்தும், புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து துவக்கயுரையாற்றினார்.

தொடர்ந்து மாநாட்டில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலச்செயலாளர், ஆ. பிரகலதா மற்றும் மாநில துணைத்தலைவர் பி. அபராஜிதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நடைபெற்ற மாநாட்டில் அடிப்படை ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

அரசுத்துறையில் காலிப்பணியிடத்தில் 50% ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடவேண்டும்.
காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடத்தை போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும்.
ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளர்களின் ஓய்வு ஊதியம் 6750/- குடும்ப ஓய்வு ஊதியமாக வழங்கவேண்டும்.
காலை சிற்றண்டி திட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்களை கொண்டு நடத்திட வேண்டும்.
சமூக தணிக்கை என்ற போர்வையில் சத்துணவு ஊழியர்களை பழிவாங்கும் போக்கை கைவிடவேண்டும்.
போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-வது மாவட்ட மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் மற்றும் தோழமை தொழிற்சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி