மேச்சேரி அருகே யானை தந்தம் கடத்திய 3. பேர் கைது!

67பார்த்தது
சேலம் மாவட்டம்,
மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டியில்
யானை தந்தம் கடத்தி வந்த 3பேர் சிக்கினர். அவர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து ஒரு கோடி மதிப்புள்ள 1 ஜோடி யானை தந்தத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய 5 பேரை வனத்துறைனர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேச்சேரி அருகே யானை தந்தங்களை ஒரு கும்பல் கடத்திவருவதாக வனவிலங்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சேலம் மாவட்ட வன பாதுகாப்பு படையினரும், மேட்டூர் வனச்சரகர் மற்றும் வன ஊழியர்களும் வாகன சோதனையை செய்து கோனூர் காப்புக்காடு வனப்பகுதியில், மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 8 பேரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி சுற்றி வளைத்தனர்.
அப்போது யானை தந்தங்களுடன் வந்த நபர்களை கைது செய்தனர்.
அப்போது வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணையில்
சேகர் 26 தருமபுரி, பாலு 40 வாழப்பாடி சோமசுந்தரம் 42
தருமபுரி
என்பது தெரியவந்துள்ளது. மேலும்
வனத்துறை அதிகாரிகள் கைது செய்து தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யபட்ட 3 நபர்களை மேட்டூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய
சரவணன்
ராஜ்குமார்
ராமர்
சின்ணையன்
வெங்கடாஜலம்
ஆகிய ஐந்து நபர்களை வனத்துறை அதிகாரிகள் தீவிர மாக தேடிவருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி