ஓமலூரை அச்சுறுத்தும் தொடர் திருட்டு!

69பார்த்தது
சேலம் மாவட்டம், ஓமலூர் நகர்ப்புறத்திற்கு சற்று வெளியே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள கடைகளில் கூரையை பிரித்து இறங்கும் திருடர்கள் கடந்த 3 மாதங்களாக மாமாங்கம் முதல் ஓமலூர் ஆர். சி. செட்டிப்பட்டி வரை தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு அலங்கார் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள இரும்பு கடையில் மேற்கூரையை பிரித்து திருட முயற்சித்துள்ளனர். ஓமலூர் போலீசாரின் இரவு ரோந்து என்னவாயிற்று? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தொடர் திருட்டு சம்பவம் அலட்சியம் காட்டும் காவல்துறை.

தொடர்புடைய செய்தி