சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 20-8-2024 நேற்று கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
இதில் 39 விவசாயிகள் மற்றும் 5 வியாபாரிகள் கொண்டு வந்த 299 மூட்டைகள் தேங்காய் பருப்பு அதிகவிலை கிலோ 104. 19 எனவும், குறைந்தவிலை கிலோ 63. 99 ரூபாய் எனவும், சராசரியாக கிலோ 100. 89 எனவும், அளவு 139. 74 குவிண்டால் மொத்தம் 1335652. 21/- ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.