சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவுப் பகுதியான இடுகாடு முதல் பயனியர் மாளிகை வரை தெரு விளக்குகள் இன்றி இரவில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நகரின் முக்கிய பிரதான சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவில் பணிக்குச் சென்று வீடு திரும்பும் பெண்கள், மற்றும் குடும்பத்துடன் ஒரு வித அச்சத்துடனே இப்பகுதியை கடந்து சென்றனர். இதுகுறித்து கடந்த புதன்கிழமை லோக்கல் செய்தி வெளியிட்டதையடுத்து நேற்று மாலை தெருவிளக்குகள் சரி செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது.