சேலத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் தற்கொலை
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே தோரமங்கலம் மோட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 76). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து சாப்பிட்டு வந்ததாகவும், மேலும் காது வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ( செப்.21) மாலை காதுவலி அதிகமானதால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.