தேவூர் அருகே கார் விபத்தில் மளிகை கடைக்காரர் பலி

85பார்த்தது
தேவூர் அருகே கார் விபத்தில் மளிகை கடைக்காரர் பலி
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கார்த்திகேயன் (வயது 38). இவர் தேவூர் அருகே தண்ணிதாசனூர் நால்ரோடு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மளிகை கடை வைத்தார்.

நேற்று(செப்.21) மாலை கடைக்கு தேவையான மளிகை பொருட்களை தனது காரில் ஏற்றிக் கொண்டு கோனேரிபட்டி பகுதியில் இருந்து தண்ணிதாசனூர் செல்லும் சாலையில் சென்றார். அப்போது பூமணியூரை அடுத்த கரியானூர் வளைவில் சென்றபோது கார் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதியது. இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி