தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழிசை சவுந்தரராஜன் மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என பேசி இருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியலையும், அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு, சர்வாதிகார பாசிச முறையில் மோடியின் ஆட்சி செயல்பட்டு வருகிறது. அந்த ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சவுந்தரராஜனின் அறியாமையை காட்டுகிறத" என குறிப்பிட்டுள்ளார்.