அந்தியூர் - Anthiyur

அந்தியூர்: கருகும் கடலைச் செடிகள்... விவசாயிகள் வேதனை

அந்தியூர்: கருகும் கடலைச் செடிகள்... விவசாயிகள் வேதனை

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி -அரக்கன் கோட்டை, மேட்டூர் மேற்கு கரை உள்ளிட்ட முக்கிய பாசனங்கள் உள்ள போதிலும் கனிமான அளவுக்கு மானாவாரி நிலங்களும் உள்ளன. பவானி, அந்தியூர், நம்பியூர், பெருந்துறை, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானவாரி நிலங்கள் அதிக அளவில் உள்ளன. மழையை மட்டும் நம்பி உள்ள மானவாரி நிலங்களில் கடலை, சோளம், தட்டைப்பயறு, பாசிப்பயறு உள்ளிட்டவைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆடி பட்டத்தை ஒட்டி கடலை விதைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக செடிகள் நன்கு வளர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருவதாலும் மழை பொழிவு இல்லாததாலும் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கடலை செடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்தியூர், பருவாச்சி செம்புளிச்சாம் பாளையம், இரட்டை கரடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கடலை செடிகள் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருவதால் கடலை செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా