சத்தியமங்கலம்: விலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் அச்சம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. இந்தச் சாலை அடர்ந்த வனப் பகுதியைக் கடந்து செல்கிறது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி மைசூர் தேசிய நெடுஞ்சாலைகள் வந்து வாகனங்களை வழிமறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி ஒன்று சாலையைக் கடந்து சென்ற வீடியோ வைரலானது. தொடர்ந்து கரடி குட்டியுடன் சாலையைக் கடந்து சென்றது. இதைத் தொடர்ந்து திம்பம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உடும்பு சாவகாசமாக சாலையைக் கடந்து சென்றது.