பவானி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் எரியூட்டப்படும் குப்பை கழிவுகளால் பவானி - குமாரபாளையம் செல்லும் புதிய பாலம், பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள மக்கள் புகையால் பாதிக்கப்படுகின்றனர். பேருந்து நிலையம் அருகிலேயே மருத்துவமனைகளும் உள்ளதால் நோயாளிகளும் பொதுமக்களும் சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.