ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் பண்டிகையின் முக்கிய நிகழ்வான, ஆடித் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, சப்பார தேரில் காமாட்சியம்மன் முன்னே செல்ல, ஒன்றன்பின் ஒன்றாக, சுமார் 60 அடி உயர மகமேரு தேரில், பெருமாள் மற்றும் குருநாத சுவாமி பின்னே சென்றன.
மட பள்ளியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வன கோவிலுக்கு, சுவாமிகளை பக்தர்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.
வனக் கோவிலுக்கு செல்லும் சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
மீண்டும் நாளை அதிகாலை அங்கிருந்து மூன்று சுவாமிகளும் மடப்பள்ளிக்கு திரும்புகின்றன.
தென்னகத்தின் புகழ்பெற்ற குருநாத சுவாமி கோவில் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.