பெண்கள் கூலி உயர்வு வேண்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

74பார்த்தது
ஈரோடு மாவட்டம் பவானியில் LTUC சங்கம் சார்பில் கட்டப்பை தைக்கும் பெண் தொழிலாளர்கள் கூலி உயர்வு வேண்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் LTUC சங்கம் சார்பில் கட்ட பை தைக்கும் பெண் தொழிலாளர்கள் மூன்றாண்டுகள் கூலி உயர்வு உயர்த்தி முடிவடைந்த நிலையில் மீண்டும் கூலி உயர்வு வழங்கிட வேண்டி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட பொருளாளர் சிவகாமி தலைமை வகித்தார் பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் மாநிலச் செயலாளர் புகழேந்தி மதுமிதா மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டு கூலி உயர்வு வழங்கிட கோரி கண்டன கோஷத்தில் ஈடுபட்டனர்.

இதில் சுத்துபட்டி பை ஒன்றுக்கு இரண்டு ரூபாயும் சைடுபட்டி பை ஒன்றுக்கு 1. 75 ரூபாயும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு வழங்கிட வேண்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் பேரணையாக நடந்து வந்து பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தலைமை இடத்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி