தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதே போல் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.