பவானி பிரிவில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்

72பார்த்தது
ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில் பவானி ஆற்றங்கரை பகுதியில் உள்ளவர்களை காலி செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்த நிலையில் தங்களுக்கு நிரந்தரமாக குடியிருப்பு வேண்டும் அல்லது அப்பகுதியிலேயே குடியிருக்க வழி செய்ய வேண்டும் என கூறி பவானி அந்தியூர் பிரிவில் 500க்கும் மேற்பட்ட அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சாலை மறியலால் காலை நேரங்களில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்ல கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் பவானி ஆற்றங்கரை ஒரு பகுதி உள்ள பொதுமக்கள் கூறியதில் தங்களுக்கு நிரந்தரமாக இடம் வழங்கவில்லை என்றால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி