அந்தியூர் - Anthiyur

ஈரோடு: சாலைகளை வழிமறித்து நிற்கும் 7 காட்டு யானைகள்

ஈரோடு: சாலைகளை வழிமறித்து நிற்கும் 7 காட்டு யானைகள்

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து திம்பம் மலைப்பாதை செல்லும் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து திம்பம் செல்லம் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழக -கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த பகுதி உள்ளது. இந்நிலையில் நேற்று(அக்.27) மாலை பண்ணாரி அம்மன் கோவில் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 7 காட்டு யானைகள் கூட்டம் சாலையோரம் முகாமிட்டு வாகனங்களை வழிமறித்தது. யானை கூட்டம் சாலை நடுவே இருப்பதை கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். இதை மீறி சென்ற ஒரு சில வாகனங்களை அந்த யானைக் கூட்டங்கள் துரத்த தொடங்கின. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. யானை கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் அரை மணி நேரம் சாலையோரம் இருந்த அந்த யானை கூட்டங்கள் பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా