டெங்கு தடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

65பார்த்தது
டெங்கு தடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
ஈரோடு மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்பு 350 கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஒரு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 50 வீடு என்ற வீதத்தில் 4 மண்டலங்களிலும் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகதார பணியாளர்கள் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த ஆண்டுகளில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தொடர் கொசு ஒழிப்பு பணி மற்றும் சுகாதார பணிகளை கூடுதல் கவனம் செலுத்தி மேற்கொண்டு வருகிறோம். வரக்கூடிய நாட்களில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை துரிதப்படுத்த மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலங்களில் மேற்கொள்ள உள்ளோம்.

மேலும், புதிய கட்டிடங்களிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க கட்டிட உரிமையாளர்களிடம் அறிவுறுத்தி வருகிறோம். வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் நிரப்பும் பேரல்களை பிளிச்சிங் பவுடரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இந்த கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிக்கு மாநகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி