அந்தியூர் அருகேயுள்ள பிரம்மதேசம் புதூரில் 43 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி பழுதடைந்து கான்கிரீட் மேல் ஸ்லாப் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்தத் தொட்டியில் உள்ள தண்ணீரில் புழு மண் கலந்து உள்ளதால் பொதுமக்கள் இதனைக் குடிக்க முடியாத சூழல் உருவானது. இதையடுத்து பழுதடைந்த தண்ணீர் தொட்டி அருகிலேயே புது தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. எனவே புதிய தண்ணீர் தொட்டியை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.