பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்

60பார்த்தது
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது. ஆடிப்பெருக்கு தை மற்றும் அடி அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடி செல்வது வழக்கம். தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபங்கள் படித்துறை புனித நீராடும் இடங்களை மூழ்கடித்தவாறு செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அரசு தடை விதித்துள்ளது.

இருப்பினும் பக்தர்கள் காவிரி நீரில் புனித நீராடும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலமாக நீர் எடுத்து பக்தர்கள் குளிப்பதற்கு ஷவர் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கூடுதுறைக்கு வந்துள்ள ஈரோடு நாமக்கல் கரூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோருக்கு காய்கறிகள் படையல் இட்டு, பிண்டம் வைத்து திதி, தர்ப்பணம் கொடுத்து குடும்பத்துடன் தங்கள் முன்னோர்களை வழிபட்டு கோயில் நிர்வாகத்தால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஷவர்பாத்தில் புனித நீராடி சங்கமேஸ்வரர், வேதநாயகியை உடனுறை அம்மனை வணங்கி சென்றனர்.

தொடர்புடைய செய்தி