திருவடனை - Tiruvadanai

ராமநாதபுரம்: தேவா் சிலைக்கு மாலை அணிவிப்பதில் மோதல்

நயினாா்கோவிலில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவிப்பதில் இரண்டு கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸாா் கல்வீசி தாக்கப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், எமனேசுவரம் காவல் நிலையத்தில் போலீஸாராக பணியாற்றி வருபவா் பிரபாகா். இவா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, நயினாா்கோவில் தேவா் சிலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அக்கிரமேசி கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கும், அஞ்சாமடை கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில், இரண்டு கிராமத்து இளைஞா்களும் ஒருவரை ஒருவா் கல்களை வீசி தாக்கிக் கொண்டனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் தடுக்க முற்பட்டபோது, காவலா் பிரபாகா் தலையில் காயம் ஏற்பட்டது. காயமுற்ற அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து, இரு தரப்பினரிடையே பேச்சு வாா்த்தை நடத்திய போலீஸாா் அவா்களை பசும்பொனுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வீடியோஸ்


இராமநாதபுரம்
Nov 03, 2024, 02:11 IST/இராமநாதபுரம்
இராமநாதபுரம்

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கு ஆபத்து

Nov 03, 2024, 02:11 IST
ராமநாதபுரம் ரயில்நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து இறங்கி, ஏறிச்செல்லும் பயணிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் ராமநாதபுரம் ரயில் நிலையம் வழியாக ராமேஸ்வரத்திற்கு சென்னையில் இருந்து சேது எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது. இதுபோக வாராந்திர ரயில்களாக திருப்பதி, வாரணாசி, செகந்திரபாத், ராஜஸ்தான் ஹஜ்மீர், அயோத்தி, பனரஸ் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகின்றன ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றொரு பிளாட்பாரம் செல்வதற்கு 10 நிமிடங்கள் வரை ஆகும் இதை தவிர்ப்பதற்காகவும், தாமதமாக வரும் பயணிகள் ரயிலை பிடிக்க ஆபத்தை உணராமல் பிளாட்பாரம் தண்டவாளப்பாதையில் இறங்கி, ஏறிச்செல்வது வாடிக்கையாகியுள்ளது. அப்போது பயணிகள் குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ரயில்வே விதிகளை மீறி ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து பிளாட்பாரத்திற்கு செல்லும் பயணிகளை கண்காணித்து அவர்களை எச்சரிக்கவும், விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்