திருவடனை - Tiruvadanai

தேவிபட்டினம், தொண்டியில் கப்பற்படை அதிகாரிகள் ஆய்வு

தேவிபட்டினம், தொண்டி மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பற்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடல் வழியாக தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தேவிபட்டினம் முதல் எஸ். பி. பட்டினம் வரை கடலோர பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையை சேர்ந்த அதிகாரிகள் ஆனந்த்குமார், அகில் எஸ். நயர், ராம்கிருஷ்ணபாபர் ஆகியோர் தேவிபட்டினம், தொண்டியில் உள்ள மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் நடைபெறும் பணிகள் குறித்தும், கடற்கரை பகுதிகளுக்கு சென்று மீனவர்கள் படகுகளை நிறுத்தும் இடங்களையும் பார்வையிட்டனர். தேவிபட்டினம் எஸ். ஐ. அய்யனார், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் மரைன் போலீசார் உடனிருந்தனர். பயங்கரவாதிகள் நடமாட்டம், கண்காணிப்பு பணிகள் குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினர்

வீடியோஸ்


இராமநாதபுரம்
Nov 03, 2024, 02:11 IST/இராமநாதபுரம்
இராமநாதபுரம்

பாம்பனில் கனமழை பயணிகள் சிரமம்

Nov 03, 2024, 02:11 IST
பாம்பனில் பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பெய்கிறது. இந்நிலையில் காலை பாம்பனில் திடீரென பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை பாலம் ஓரத்தில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாலத்தில் சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்கள், சரக்கு லாரிகள் ஊர்ந்தபடி சென்றன மேலும் பாலத்தில் நின்றபடி புதிய ரயில் பாலம், மன்னார் வளைகுடா கடலில் உள்ள தீவுகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் கடந்து சென்றனர். தொடர்ந்து பெய்த மழையால் பாம்பன் பகுதி மக்களின் இயல்பு நிலை பாதித்தது