மர்மமான முறையில் 2 ஆண்கள் இறந்து கிடந்தனர் போலீசார் விசாரணை

80பார்த்தது
திருவாடானை
பகுதிகளில் மர்மமான முறையில் இரண்டு ஆண்கள் இறந்து கிடந்தனர் போலீசார் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தொத்தார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளி பிரம்மையா வயசு (44) இவர் மீன் வெட்டும் தொழில் செய்ததோடு. குடும்பத்துடன் பிரிந்து பேருந்து நிலையம் அருகில் தங்கி வந்துள்ளார். நேற்று இரவில் பேருந்து நிலைய சைக்கிள் நிறுத்தும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.     
      அதேபோல் சின்னகீரமங்கலம் சந்தை பகுதியில் மதுரை ஜெய்ஹிந்த் பரத்தைச் சேர்ந்தஅண்ணாமலை மகன் கண்ணன் இவருக்கு மதுபாலா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில் இங்கேயே தங்கி அருகில் ரேசன் கடை கட்டிடம் கட்டி வருகிறார்.
    இவர் நேற்று இரவு வழக்கம் போல் பணி முடித்து விட்டு அருகில் உள்ள சந்தை பகுதியில் இரவில் படுத்திருந்த நிலையி மர்மமான  முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து திருவாடானை போலீசார் விசாரித்ததில் இயற்கை மரணமாக இருக்கலாம். இருந்தும் மேலும் இருவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகே உண்மை தெரியவரும் என்று தெரிவித்தனர். இருவரது உடல்  திருவாடானை அரசு மருத்துவமனை பிணைக்கடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் திருவாடனை காவல் நிலையத்தார் விசாரித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி