ஜெயவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
திருவாடானை மங்களநாதன் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவிலுக்கு ஒவ்வொரு சனிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். மஞ்சள் பால் பன்னீர் இளநீர் திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமிக்கு வெற்றிலை, துளசி, மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அய்யன் அருள் பெற்று சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது