ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கூகுடி கிராமத்திற்கு செங்கல் ஏற்றி வந்த லாரியில் 2 பெண், 2 ஆண் தொழிலாளர்களுடன் கூகுடி கிடைத்திற்கு வந்து கொண்டிருந்த போது கூகுடி விலக்கு பகுதியில் செங்கல் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி வளைவில் திரும்புவதற்காக மெதுவாக வந்த பொழுது சாலையில் இருந்த பாலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டு அதில் சிக்கிய லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
அந்த விபத்தில் லாரியில் இருந்த. காரைக்குடி முத்து ராக்குஓட்டுநர், தொழிலாளர் தேவகோட்டை இளையராஜா இருவருக்கும் காயம் ஏற்பட்டது. உடன் அருகில இருந்த கிராம மக்கள் காயம்பட்டவர்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் லாரியில் வந்த இரண்டு பெண், ஒரு ஆண் தொளிலாளர்கள் காயமின்றி தப்பினர்.
விபத்து இது குறித்த பகுதி மக்கள் கூறுகையில் தர மற்ற சாலை என்பதாலும் ஏழு கண்மாய்களின் உபரி நீர் இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்கிறது என்றும் அதனால் பாலம் சற்று வலுவிழந்து இருந்ததால் அந்த நேரத்தில் லாரி வந்த பொழுது விபத்து நடந்துள்ளது. எனவே தரமான பாலம் அமைத்து, இருபுறமும் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விபத்தின் காரணமாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.