காரங்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

51பார்த்தது
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு தொண்டி அருகே காரங்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.

தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவரது மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக இங்கு உள்ளன. இப்பகுதி சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறை சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அலையாத்தி காடுகளுக்கு இடையே செல்லும் போது பறவைகளை கண்டு ரசிக்கலாம்.
விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். நேற்று தீபாவளியை முன்னிட்டு தொடர்விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி