இந்து அறநிலையதுறையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

73பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அருகே அனுச்சகுடி கிரமத்தில் அருள்மிகு காளியம்மன் திரு கோவில உள்ளது. இக்கோவில் இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ளது. இக்கோவிலில் நிர்வாக சீர்கேடு உள்ளது எனவும், இதற்கு இந்து அறநிலைய துறை ஆய்வாளர் உடந்தையாக இருப்பதால் அதனை கண்டித்து இந்து மக்கள் நல இயக்கம் தமிழகம் இந்து ஜனநாயக பேரவை மற்றும் கிராம மக்கள் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போரட்டம் கோவில் முன்பு நடை பெற்று வருகிறது. நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமாக இந்து அறநிலை துறை ஆய்வாளர் செயல்பட்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியும், கோவில் நன்கொடை வசூலில் கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும, கோவிலுக்கு சாராத நபரை தற்காவிக அரங்காவலராக நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும், கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தியவர்கள் மீன வழக்கு தொடர்ந்தன ரத்து செய்ய வேண்டும், பழைய நடை முறையை கோவிலில் கையாள வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்பது என்று உறுதியளித்ததின் பெயரில் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி