திருவடனை - Tiruvadanai

ராமநாதபுரம்: தேவா் சிலைக்கு மாலை அணிவிப்பதில் மோதல்

நயினாா்கோவிலில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவிப்பதில் இரண்டு கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸாா் கல்வீசி தாக்கப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், எமனேசுவரம் காவல் நிலையத்தில் போலீஸாராக பணியாற்றி வருபவா் பிரபாகா். இவா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, நயினாா்கோவில் தேவா் சிலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அக்கிரமேசி கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கும், அஞ்சாமடை கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில், இரண்டு கிராமத்து இளைஞா்களும் ஒருவரை ஒருவா் கல்களை வீசி தாக்கிக் கொண்டனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் தடுக்க முற்பட்டபோது, காவலா் பிரபாகா் தலையில் காயம் ஏற்பட்டது. காயமுற்ற அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து, இரு தரப்பினரிடையே பேச்சு வாா்த்தை நடத்திய போலீஸாா் அவா்களை பசும்பொனுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வீடியோஸ்


இராமநாதபுரம்