கந்த சஷ்டி பெருவிழா முன்னிட்டு காப்பு கட்டுதல் வைபவம்

68பார்த்தது
சிவகங்கை நகர் மையப்பகுதியில் தெப்பக்குளம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா முன்னிட்டு காப்பு கட்டுதல் வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தங்கள் விரதத்தை துவங்கினர். இத்திருகோவிலில் பிரதான மற்றொரு சன்னதியில் வள்ளி தெய்வானை சமேதராக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு விழா காப்பு கட்டுதளுடன் துவங்கியது. முன்னதாக உற்சவர் முருகப்பெருமானுக்கு சக்திவேல் வைத்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று. பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அர்ச்சகரிடம் தங்கள் கையில் காப்பு கட்டி க்கொண்டு விரதத்தை துவங்கினர் விழா நாட்களில் மூலவர் முருகப்பெருமானுக்கும் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனைகளும் நடைபெற்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி