

கீரனூர்: டீசல் திருடிய 3 பேர் கைது
குப்பம்பட்டியில் கல்குவாரியில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் டீசலை திருடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒப்பந்தக்காரர் சந்திரசேகர் இதை பார்த்து சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் வேதமுத்து (36), வைத்தியநாதன் (45), முருகானந்தம் (39), மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.