புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் ரகுநாதபுரத்தில் இருந்து கரம்பக்குடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே காரில் வந்த விக்னேஷ் என்பவர் மோதியதில் தன்சிகா, கலைச்செல்வி ஆகிய இருவரும் கை, கால், முகத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கறம்பக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.