புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும் நடந்து செல்லும் பொது மக்களையும் அச்சுருத்தி துரத்தி கடித்து வருகின்றன.
கறம்பக்குடி வடக்கு தெரு, சேவுகன்தெரு, கண்டியன் தெரு அம்புக் கோவில் முக்கம் உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன என்று அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களுக்கு திடீரென வெறி பிடித்தது. சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்க தொடங்கியது. ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் துரத்தி கடித்து வருகிறது.
இதனால் அங்கு பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் நாயை அங்கிருந்து விரட்ட முயன்றனர் அவர்களை நாய் கடித்து குதறியது. இதில் கறம்பக்குடி சேவுகன்தெரு பகுதியை சேர்ந்த பழனிவேல் கறம்பக்குடி தட்டார தெரு பகுதியை சேர்ந்த பாஸ்கர் கறம்பக்குடி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பதினோராம் வகுப்பு பள்ளி மாணவன் சுதர்சன் உட்பட மூவரை கடித்துக் குதறியது.
இவர்கள் அருகில் உள்ள கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.