கந்தர்வகோட்டை - Gandharvakottai

கீரனுார்: சரமாரி அரிவாள் வெட்டு.. 4 பேர் மீது வழக்குப்பதிவு

கீரனுார்: சரமாரி அரிவாள் வெட்டு.. 4 பேர் மீது வழக்குப்பதிவு

கீரனுார் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (29). சலுன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகேசன் குடும்பத்தினருக்கும் இடையே ஓராண்டாக நடைபாதை தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் தினேஷ்குமார் வீட்டுப்பகுதியில் இருந்த செடிகளை, முருகேசன் வளர்த்து வந்த வெள்ளாடுகள் மேய்ந்தன. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தினேஷ்குமார், அவரது தாயார் ஜெயந்தி (50) ஆகியோரை முருகேசன் தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்டினார். மேலும், முருகேசனின் தாயார் லட்சுமி, சகோதரிகள் அம்முனி, புவனேஸ்வரி ஆகியோரும் கைகளால் தாக்கினர்.  இதில் பலத்த காயமடைந்த ஜெயந்தி, தினேஷ்குமார் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினேஷ்குமார் தரப்பு தாக்கியதில் காயமடைந்த லட்சுமி கீரனுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் முருகேசன், லட்சுமி, அம்முனி, புவனேஸ்வரி ஆகிய 4 பேர் மீது கீரனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


புதுக்கோட்டை