"தி கோட்" திரையிடலில் சிக்கல் - கொந்தளித்த புதுக்கோட்டை ரசிகர்கள்

71பார்த்தது
புதுக்கோட்டையில் உள்ள பிரபல திரையங்களில் தி கோட் திரைப்படக் காட்சி திடீரென ரத்தானதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.


புதுக்கோட்டை யில் உள்ள விஜய் திரையரங்கில் வெங்கட் பிரபு இயக்கத்தில், தமிழக வெற்றிக்கழக நிறுவனரும் திரைப்பட நடிகருமான விஜய் நடித்த தி கோட் திரைப்படம் சிறப்பு காட்சி காலையில் திரையிடப்பட்டது. அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் தி கோட் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், தியேட்டரில் காத்திருந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, திரையரங்க நிர்வாகத்திடம் படத்தை திரையிட நடவடிக்கை எடுக்கும்படி கொந்தளித்தனர். இதனைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணி காட்சியும் ரத்து செய்யப்பட்டதால், படம் பார்ப்பதற்காக ஆர்வத்துடன் குவிந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த சம்பவத்தால், திரையரங்க வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி