ஓய்வு குறித்த கேள்வி.. மனம் திறந்த ரவிசந்திரன் அஸ்வின்

61பார்த்தது
ஓய்வு குறித்த கேள்வி.. மனம் திறந்த ரவிசந்திரன் அஸ்வின்
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின், கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 100 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 37 வயதான அஸ்வின் ஓய்வு பெறவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது ஓய்வு குறித்து இப்போதைக்கு நான் எதையும் யோசிக்கவில்லை. நிச்சயம் ஒருநாள் இது போதும் என்று தோன்றும்போது நான் ஓய்வு பெற்று விடுவேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி