

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு காளை பலி.. சோகத்தில் கிராம மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகலியுகமெய்அய்யனார் கோயில் காளை 18 கிராமங்களில் சுற்றியுள்ள அய்யனார் வழிபட்டு, பிற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியுள்ளது. யாராலும் பிடிக்க முடியாத காளை என்ற பெயர் பெற்ற காளை நேற்று உயிரிழந்தது. அப்பகுதி மக்கள் வாணவேடிக்கையுடன் இறுதிச் சடங்கை செய்தனர்.