பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்றைய தினம் (டிச., 25) ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர். அதிகாலை முதலே கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர் விடுமுறை என்பதால் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.