மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச., 26) தமிழகத்தில் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும். இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், சில பகுதிகளில் பணிகள் முடியும் வரையும் மின்சாரம் இருக்காது. கோவை மாநகர், கடலூர், திருப்பூர், திருச்சி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். எனவே மின்சாதன பொருட்களை சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.