கோவை வடவள்ளி பகுதியில் தனியார் மழலையர் பள்ளியை திறந்து வைத்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறித்து, இந்த நிகழ்வு அனைவரையும் பதைபதைக்க வைத்ததாகவும் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்பது நிம்மதி அளிப்பதாகவும் கூறிய அவர், இதற்காக பங்காற்றிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். திருவள்ளூர் கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து, ரயில் விபத்துகளை பொருத்தவரை, ஒவ்வொரு நேரத்திலும்குறிப்பிட்ட காரணங்கள் இருப்பதாகவும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில்மத்திய அரசு தீவிரம் காட்டிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். எளிய பயணிகளுக்கு கட்டணத்தை உயர்த்தாமல் தரமான சேவையை ரயில்வே துறை அளித்து வருவதாகவும் விபத்துகளைப் பொறுத்தவரை மத்திய அரசு எச்சரிக்கையாக கையாளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.